ஐராவதீஸ்வரர் கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள்


ஐராவதீஸ்வரர் கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள்
x

காணும் பொங்கலையொட்டி தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

காணும் பொங்கலையொட்டி தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

ஐராவதீஸ்வரர் கோவில்

கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் உள்ளது ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் புகழ்பெற்ற ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலுக்கு காணும் பொங்கல் விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். நேற்று காணும் பொங்கலையொட்டி காலை 9 மணி முதல் கும்பகோணம் மட்டுமின்றி ஏராளமான ஊர்களில் இருந்து பெண்களும் குழந்தைகளும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு வர தொடங்கினர்.

பாதுகாப்பு பணி

மதியம் ஒரு மணிக்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான பெண்கள் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள பல்வேறு மரங்களின் கீழே அமர்ந்து உணவு சாப்பிட்டனர். அதன் பின்னர் மாலை 4 மணி முதல் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் குழந்தைகள் என குடும்பத்துடன் ஐராவதீஸ்வரர் கோவில் நான்கு புறமும் உள்ள புல்வெளியில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் பொழுதை களித்தனர். ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் தாராசுரம் கோவிலில் கூடியதால் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story