மீன் பிடிப்பதற்காக மின்மோட்டார் மூலம் ஏரி தண்ணீர் அகற்றம்; அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்


மீன் பிடிப்பதற்காக மின்மோட்டார் மூலம் ஏரி தண்ணீர் அகற்றம்; அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்
x

ஆவுடையார்கோவில் அருகே மீன் பிடிப்பதற்காக மின்மோட்டார் மூலம் ஏரி தண்ணீர் அகற்றப்பட்டது. இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் தாலுகா கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் சிலர் மீன்களை பிடித்து விற்கும் நோக்கத்தில் மின்மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி வருவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்மோட்டாரை நிறுத்துமாறு கூறினர். இதனால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மின் மோட்டாரை நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் ஆடி, ஆவணி மாதங்களில் விவசாயிகள் விதை விதைக்க உள்ளதால் ஏரி நீரை வீணாக்க கூடாது. மேலும் அந்த ஏரியில் பொருத்தப்பட்டு உள்ள மின் மோட்டாரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


Next Story