கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க செயல்விளக்க முகாம்


கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க செயல்விளக்க முகாம்
x

மதுக்கூர் அருகே கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க செயல்விளக்க முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே தளிக்கோட்டை கிராமத்தில் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க செயல்விளக்க முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் தளிக்கோட்டை பகுதி கால்நடை உதவி மருத்துவர் இளவரசி கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார். மேலும் சத்துமருந்து, குடல் புழு நீக்க மருந்து, உன்னி மற்றும் பேன் நீக்க மருந்துகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். தளிக்கோட்டை கிராமத்தைச் சார்ந்த 60 விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் மருந்துகள் வழங்கப்பட்டது. முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி பேசினார். இதில் வேளாண்மை அலுவலர் இளங்கோவன், துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி, வேளாண்மை உதவி அலுவலர் ராமு, அறுவடை பரிசோதனை பணியாளர் இளமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா, உதவி தொழில்நுட்ப மேலாளர் அய்யாமணி மற்றும் ராஜு ஆகியோர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.


Next Story