3.70 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.70 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 21-ந் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுடைய 2,94,284 நபர்களுக்கு அங்கன்வாடி, பள்ளி, கல்லூரிகளிலும், 20 முதல் 30 வயதுடைய 76,493 பேருக்கு வீடு வீடாக சென்று அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம, நகர சுகாதார செவிலியர்கள் மேற்பார்வையில் மொத்தம் 3,70,777 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
இந்த மாத்திரை உட்கொள்வதால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் இத்திட்டம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். லேசான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடற்சோர்வு மற்றும் சிறு உடல்நல பிரச்சினை உள்ள குழந்தைகள் மற்றும் வேறு காரணங்களால் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 21-ந் தேதி அன்று மாத்திரைகள் வழங்கப்படும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைவரும் இந்த மாத்திரை உட்கொண்டு பயனடைந்து நலமுடன் வாழ வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.