பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
கடையம் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
கடையம்:
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் முரளிசங்கர் ஆலோசனையின்படி கடையம் வட்டாரத்திற்கு உட்பட்ட ரமணசமுத்திரம் பஞ்சாயத்தில் உள்ள யூனியன் நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த வட்டார தலைமை மருத்துவர் பழனிகுமார் மேற்பார்வையில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமலட்சுமி மாத்திரைகளை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், தென்காசி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தொற்று நோய் மருத்துவ நிபுணர் தண்டாயுதபாணி, துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் தர்மலிங்கம், கடையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், சமுதாய சுகாதார செவிலியர் லீனாள் தேவி, பகுதி சுகாதார செவிலியர் பேபி சாந்தி, முத்துக்கனி, கிராம சுகாதார செவிலியர் ஜெயபத்திரகாளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.