போலீஸ் நிலையங்களில்டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு


போலீஸ் நிலையங்களில்டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை, கொல்லங்கோடு போலீஸ் நிலையங்களில்டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

குமரி மாவட்டத்திற்கு வந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மதியம் குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட நித்திரவிளை, கொல்லங்கோடு போலீஸ் நிலையங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். நித்திரவிளை போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் புகார்தாரர்கள் வருகை பதிவேடு மற்றும் வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்தார்.

அப்போது கோப்புகளை சரியான முறையில் பராமரித்து வரும் எழுத்தரை பாராட்டி ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து பணியில் இருந்த போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து போலீஸ் நிலைய சுற்றுப்புறங்களை எவ்வாறு பராமரிக்கின்றனர் என்பதை பார்வையிட்டார். அப்போது, போலீஸ் நிலையத்தின் பின்புறம் காலியாக கிடக்கும் இடத்தில் போலீசாருக்கான தங்கும் விடுதி அமைக்கலாம் என்று ஆலோசனை நடத்தினார்.

ெதாடர்ந்து கொல்லங்கோடு போலீஸ் நிலையம் சென்றார். அங்கு எல்லை பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி கோப்புகளை ஆய்வு செய்தார். அவருடன் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Next Story