தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடியில் நிறுத்தம்
தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிரேக் இணைப்பு துண்டானதால் வாணியம்பாடியில் நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
பிரேக் இணைப்பு துண்டிப்பு
கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் வரையில் செல்லக்கூடிய தன்பாத் எக்ஸ்பிரஸ் ெரயில் நேற்று மாலை 6.10 மணிக்கு வாணியம்பாடி ெரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ெரயிலின் 6-வது பெட்டியில் இருந்த பிரேக் இணைப்பு துண்டானதால் ரெயில் நகர முடியாமல் இரண்டாவது பிளாட்பாரத்திலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் இரண்டாவது பிளாட்பாரம் வழியாக செல்ல வேண்டிய அனைத்து ெரயில்களும் மாற்று பாதைகள் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது.
2 மணிநேரம் தாமதமாக...
இது தொடர்பாக உடனடியாக ஜோலார்பேட்டையில் உள்ள ெரயில்வே உயர் அதிகாரிகளுக்கும், காட்பாடியில் உள்ள அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் சீரமைப்பு குழுவினருடன் விரைந்து வந்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு சுமார் 8 மணி அளவில் சீரமைப்பு பணி முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக ெரயில் புறப்பட்டு சென்றது.
ரெயில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டதால் இந்த ெரயிலில் பயணம் செய்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் கழிப்பிட வசதியோ, குடிநீர் வசதியோ இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.