தனுஷ்கோடி 3-வது மணல் திட்டில் தவித்த இலங்கை அகதி
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி 3-வது மணல் திட்டில் தவித்த இலங்கை அகதி மீட்பு
ராமநாதபுரம்
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள 3-வது மணல் திட்டில் இலங்கை அகதி ஒருவர் வந்திறங்கி இருப்பதாக மீனவர்கள் மூலம் கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து கடலோர போலீசார், மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகு ஒன்றில் நடுக்கடல் பகுதியில் உள்ள 3-வது மணல் திட்டுக்கு சென்றனர். அங்கு மணல்திட்டில் தவித்துக் கொண்டிருந்த இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த லெபான் (வயது 30) என்பவரை மீட்டனர். பின்னர் அவரை படகில் ஏற்றி ராமேசுவரம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இலங்கையில் இருந்து அவர் எதற்காக வந்தார் என்று மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story