தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா


தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா நடந்தது

மயிலாடுதுறை

பொறையாறு:

பொறையாறு அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் 57-வது ஜென்ம நட்சத்திர விழா நடந்தது. விழாவையொட்டி கோவில் நுழைவு வாயிலில் இருந்து தருமபுரம் ஆதீனம் பூரண மரியாதையுடன், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அழைத்து வரப்பட்டார். பின்னர் கோ பூஜை மற்றும் கஜ பூஜை நடந்தது. தொடர்ந்து 11 வேத விற்பன்னர்கள் கொண்டு ருத்ராபிஷேம் நடந்தது. மேலும் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்தஞ்சேய ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஜென்ம நட்சத்திரஹோமம், ருத்ர மகாயாகம் உட்பட 16 ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. 11 சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர். கட்டளை தம்பிரான் உள்ளிட்டோர் தருமபுரம் ஆதீனத்துக்கு குரு பூஜை செய்தனர். கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் ஆதீனம் வழிபட்டார்.


Next Story