"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும்" - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

சென்னை,

2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். இன்று காலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

விழாவுக்குப் பின்னர், பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் பிரதமர் மோடி சென்றடைந்தார். பிரதமரை வழியனுப்புவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

பிரதமரை வழியனுப்பிய பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

"பிரதமர் மோடி என் உடல்நிலை எப்படி உள்ளது என கேட்டார். நன்றாக உள்ளது என தெரிவித்தேன். உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என்று கூறினார்

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெல்லும் என்றார்.


Next Story