ஈரோட்டில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்


ஈரோட்டில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x

ஈரோட்டில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு

ஈரோடு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், ஈரோடு காளைமாட்டு சிலை அருகே நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராக்கி முத்து தலைமை தாங்கினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொது வினியோக முறையை சீர்படுத்திட வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாநில செயலாளர் குபேரன், மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story