கைக்குழந்தையுடன் கல்லூரி முன்பு மாணவி தர்ணா


கைக்குழந்தையுடன் கல்லூரி முன்பு மாணவி தர்ணா
x

தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி கைக்குழந்தையுடன் வாலாஜா கல்லூரி முன் மாணவி தர்ணாவில் ஈடுபட்டார்.

ராணிப்பேட்டை

வாலாஜா

தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி கைக்குழந்தையுடன் வாலாஜா கல்லூரி முன் மாணவி தர்ணாவில் ஈடுபட்டார்.

கல்லூரி மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த ஆயிலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணனின் மகள் காமாட்சி (வயது 20). இவர் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ் படித்து வந்தார்.

இவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்த போது இவருக்கும் தேவஅன்பு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காமாட்சிக்கு குழந்தை பிறந்த நிலையில் தன் கல்லூரிப் படிப்பை தொடர வேண்டும் என நினைத்த காமாட்சி குழந்தை பிறந்து ஒரு மாத காலத்தில் கல்லூரிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

அனுமதி மறுப்பு

இதனை கண்ட பேராசிரியர்கள் பச்சிளம் குழந்தையை கல்லூரிக்கு கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தி விடுப்பு எடுக்க அறுவுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக காமாட்சி விடுப்பு எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் இறுதி ஆண்டு தேர்வை எழுத காமாட்சி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணம் கட்டியுள்ளார்.

இறுதி ஆண்டு தேர்விற்கு முந்தைய தேர்வான திருப்புதல் தேர்வை அவரை அனுமதிக்காததோடு வருகை பதிவேட்டில் குறைவான நாட்களே அவர் கல்லூரிக்கு வந்தது பதிவானதால் தேர்வு எழுத அனுமதிக்க முடயாது என்று கூறி 2 மாதங்களுக்கு முன்பு செலுத்திய கட்டணத் தொகையை கல்லூரி நிர்வாகம் திருப்பி வழங்கியது.

தர்ணா

ஆத்திரமடைந்த காமாட்சி தனது கைக் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தன்னை இறுதியாண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காமாட்சியை பேராசிரியைகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால் காமாட்சி அதற்கு உடன்படாததால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு வந்து மாணவியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின் போராட்டத்தை கைவிட்டு குழந்தையுடன் காமாட்சி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Related Tags :
Next Story