விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அலுவலரை கண்டித்து தர்ணா
நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அலுவலரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அலுவலரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மூட்டைக்கு ரூ.50 லஞ்சம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாணார்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ரஞ்சித், பிரேம்குமார், சுப்பிரமணி உள்பட 6 பேர் அரியப்பாடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் மையத்தில் தங்களது நெல்லை விற்பனை செய்வதற்காக டிராக்டரில் 115 மூட்டைகளை ஏற்றி சென்றனர்.
அங்கு நெல்லை உடனே எடை போட வேண்டும் என கூறியதற்கு எடை போடுபவர் மற்றும் அலுவலர் ஒரு மூட்டைக்கு ரூ.50 லஞ்சமாக கொடுத்தால் உடனே எடை போடுகிறோம் எனக் கூறியதாக தெரிகிறது.
தர்ணா போராட்டம்
இதனை கண்டித்து விவசாயிகள் டிராக்டரில் நெல் மூட்டைகளுடன் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் விவசாயிகள் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் அலுவலகத்தில் இருந்த உதவி அலுவலர்கள் அங்கு வந்து வருவாய் கோட்டாட்சியர் நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து சென்றனர்.