கலெக்டர் காரை மறித்து தர்ணா போராட்டம்


கலெக்டர் காரை மறித்து தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடன் கொடுக்க வங்கி மறுப்பதாக கூறி கலெக்டர் காரை மறித்து 3 போ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

கடன் கொடுக்க வங்கி மறுப்பதாக கூறி கலெக்டர் காரை மறித்து 3 போ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடன் உதவி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த அலெக்சாண்டர், திட்டையை சேர்ந்த தேவிநடராஜன், மணிகிராமத்தை சேர்ந்த தேன்மொழிதமிழ்வாணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் தாட்கோவில் தாழ்த்தப்பட்டவருக்காக அரசால் ஒதுக்கப்பட்ட மானியத்துடன் கூடிய தொழில் கடனுக்கு மனுக்கொடுத்துள்ளனர்.

அவர்களது மனுக்களை விசாரித்த தாட்கோ அதிகாரிகள் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு வங்கிக்கு பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த வங்கியில் இருந்து தாட்கோ மானியத்துடன் கூடிய கடன்கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர்.

மனு கொடுக்க வந்தனர்

இந்தநிலையில் மயிலாடுதுறை தனிமாவட்டமாக உருவாகியபிறகு தொடர்ந்து பலமுறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுஅளித்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 4 வருடங்களாக தொடர்ந்து கடன்பெற அலைகழிக்கப்பட்டதால் பாதிபேர் அதற்கான முயற்சியை கைவிட்டனர்.

நேற்று மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் அலெக்சாண்டர், தேவிநடராஜன், தேன்மொழிதமிழ்வாணன் ஆகியோர் தாட்கோ கடன்கொடுக்க வங்கி நிர்வாகம் மறுப்பதாகவும், 4 வருடங்களாக கடன்பெற முடியாமல் அலைகழிக்கப்படுவதை விளம்பரப் பலகையில் எழுதிக்கொண்டு குறைத்தீர் கூட்டத்தில் மனுகொடுக்க வந்தனர்.

தர்ணா

இந்தநிலையில் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்த கலெக்டர் மகாபாரதி பணி நிமித்தமாக கூட்டத்தில் இருந்து வெளியேறினார். மாவட்ட கலெக்டர் காரில் ஏறி புறப்பட்டபோது தாட்கோ கடன் வழங்கக்கோரி காரை வழிமறித்து அலெக்சாண்டர் உள்ளிட்ட 3 பேரும் தர்ணாவில் ஈடுபட்டனர். உடனே அவர்களை மாவட்ட கலெக்டர் அழைத்துபேசி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதனால் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story