தாசில்தார் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்


தாசில்தார் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
x

சாலை வசதி கேட்டு கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை:

சாலை வசதி கேட்டு மனு

கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரெகநாதன் மகன் கருப்பையா. இவர் தனது வீட்டிற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை என்றும், சாலையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், சாலையை உரிய முறையில் அளந்து நடைபாதை அமைத்து தர வேண்டும் என வருவாய் கோட்டாட்சியருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அந்த மனுவை பரிசிலனை செய்த கோட்டாட்சியர் கடந்த 2-5-2022 அன்று கந்தர்வகோட்டை தாசில்தாருக்கு நடைபாதை அளவீடு செய்து பாதையை அமைத்து கொடுக்குமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவை செயல்படுத்துமாறு கருப்பையா கந்தர்வகோட்டை தாசில்தாரை பலமுறை நேரில் சென்று தொடர்பு கொண்டும் இது நாள் வரை கோட்டாட்சியரின் உத்தரவை செயல்படுத்த வில்லை.

தர்ணா

இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாரை கண்டித்து, கருப்பயைா தனது குடும்பத்தினருடன் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையறிந்த கந்தர்வகோட்டை தாசில்தார், அதிகாரிகளும் தர்ணாவில் ஈடுபட்ட கருப்பையாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நாளை மறுநாள் (புதன் கிழமை) நடைபாதையை அளவீடு செய்து சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கருப்பையாவின் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story