காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம்


காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
x

காலி குடங்களுடன் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36-வது வார்டு பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனவும், கழிவுநீர் கால்வாயை முறையாக தூர் வாருவதில்லை எனவும், உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கலைந்து சென்றனர்.

வாணியம்பாடி நகராட்சியின் 36-வது வார்டு அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினராக ஹாஜியார் ஜாகிர் அகமது உள்ளார். இந்த வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் பணியாளர்கள் வேண்டுமென்றே குடிநீர் வினியோகம் செய்யாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.


Next Story