கலெக்டர் அலுவலகம் முன்பு லாரி டிரைவர், மகள்களுடன் தர்ணா போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு லாரி டிரைவர், மகள்களுடன் தர்ணா போராட்டம்
x

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு லாரி டிரைவர், மகள்களுடன் தர்ணா போராட்டம் நடத்தினார்.

சேலம்

ஓமலூர் பச்சனம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். லாரி டிரைவரான இவர் நேற்று தனது மகள்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர் திடீரென்று தனது மகள்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறும் போது, எங்கள் பகுதியில் ஊராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு பொதுப்பாதைக்கு இடையூறாக உள்ள ஒரு கழிவறையை அகற்றாமல் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தேன். இதனால் சிலர் என்னை மிரட்டுகின்றனர். எனவே என்னை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன் என்றார். இதையடுத்து அவரிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story