ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்
x

நெல்லையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியது போல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுடலைமணி, அருள் மரியஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சேவியர், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தி, மாவட்ட செயலாளர் பால்ராஜ், நிர்வாகிகள் உமையொருபாகம், துரை பாக்கியநாதன், சபரிகிரிநாதன், காமராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஆசிரிய-ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story