போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆதரவாளர்களுடன் தர்ணா


போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆதரவாளர்களுடன் தர்ணா
x

புகார்மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

புகார்மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்ல முயன்றதாக புகார்

கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வெங்கடேசன். துணைத் தலைவர் சித்தார்த்தன்.

இவர்களுக்கு இடையே பதவி ஏற்ற நாளிலிருந்தே ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு இன்றி செயல் பட்டு வருகின்றனர்.

மேலும் அம்மாபாளையம் ஊருக்கு செல்லும் வழியில் ரெயில்வே கேட் சுரங்கப்பாதையில் தண்ணீரை அகற்றும் பணி பல நாட்களாக செய்யவில்லை. இதனால் கடந்த நவம்பர் மாதம் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை சித்தார்த்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனி மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், மின் சாதனத்தை நிறுத்தி பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்தார். அப்போது மின் மோட்டார் நின்று விட்டது என மின் சுவிட்ச்சை சித்தார்த்தன் ஆதரவாளர்கள் மீண்டும் போட்டனர்.

இதனை மின்சாரம் மூலம் தன்னை கொல்ல முயற்சி செய்தார்கள் என ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். இந்த மனுவை போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

தர்ணா- தீக்குளிக்க முயற்சி

இதனால் தனது மனுமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறித்தி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், அவரது ஆதரவாளர்களுடன் சம்பவத்தன்று இரவு கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை போலீசார் தடுத்து விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

பின்னர் ஆரணி துணைபோலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் நேரில் வந்து போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினார். ஆனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியிலேயே மீண்டும் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதனால் நள்ளிரவுக்கு பிறகும் போராட்டம் நிடித்தது.

அதன் பின்னர் போலீசார் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு நிலுவையில் உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டு, தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story