திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறையில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. செந்துறை பகுதிகளில் உள்ள அனைத்து கிராம கோவில்களுக்கும் திருவிழா முடிந்த பின்னர் இறுதியாக இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த கோவிலில் தீமிதி திருவிழா நடக்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு தீமிதி திருவிழா ஒரு மாதம் தாமதமாக கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் மகாபாரத கதைகளும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தீ மிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக கோவிலில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திரவுபதி அம்மன் தீக்குழி முன்பு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து விழாக்குழுவினர் தீக்குழியை சமப்படுத்தினர். பின்னர் விழாக் குழுவினர் தீ மிதித்தனர். இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். செந்துறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழாவில் செந்துறை தாலுகாவில் உள்ள அனைத்து கிராம மக்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story