திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

திருச்சி

கல்லக்குடி:

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கல்லகம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தீமிதி திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு தீமிதி திருவிழா நடக்கிறது. இதையொட்டி கடந்த மாதம் 14-ந் தேதி காப்பு கட்டி மகாபாரத நாடகம் கோவில் பூசாரி தலைமையில் நடந்தது. 22-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பக்தர்கள் சாமி கும்பிட்டுவிட்டு, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஏரிக்கரைக்கு வந்து தீ மிதித்தனர். ஒரு சில பக்தர்கள் தங்கள் குழந்தையை தோளில் சுமந்து கொண்டு தீ மிதித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவில் முக்கிய வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கரைக்காரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story