திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வீதி சுற்றி கொண்டுவரப்பட்ட கொடி பட்டத்திற்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5.10 மணிக்கு அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
பின்னர் கொடிமரத்திற்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் இன்று (வியாழக்கிழமை) சக்தி கும்பம் நிறுத்துதல் நிகழ்ச்சி, நாளை (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் வருகிற 10-ந் தேதி கோவில் வளாகத்தில் நடக்கிறது.
Related Tags :
Next Story