செவிலியர்களுக்கு சர்க்கரை நோய் தடுப்பு பயிற்சி


செவிலியர்களுக்கு சர்க்கரை நோய் தடுப்பு பயிற்சி
x

செவிலியர்களுக்கு சர்க்கரை நோய் தடுப்பு பயிற்சி நடந்தது.

அரியலூர்

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் சுகாதாரத்துறை சார்பில் கிராம சுகாதார செவிலியர்களுக்கான சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்து பேசினார். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கும் வகையில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு சர்க்கரை நோய் மருந்து பெட்டகத்தை வழங்கினார். முகாமில் கலந்து கொண்ட கிராம சுகாதார செவிலியர்களுக்கு சர்க்கரை நோய் தடுப்பு குறித்தும், பொதுமக்களிடையே சர்க்கரை நோய் குறித்து மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு குறித்தும் மருத்துவ அலுவலர்கள் மூலம் விளக்கமாக எடுத்துக்கூறி, பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story