நாதன்கோவில் ஜெகநாத பெருமாளுக்கு ரூ.3 லட்சத்தில் வைர கிரீடம்
கும்பகோணம் நாதன்கோவில் ஜெகநாத பெருமாளுக்கு ரூ.3 லட்சத்தில் வைர கிரீடம் அணிவிக்கப்பட உள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள நாதன் கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெகநாத பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், பல்வேறு சிறப்புகள் வாழ்ந்த பழமையான வைணவ கோவிலாக விளங்கும் ஜெகநாத பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகிற 24-ந்தேதி(புதன்கிழமை) நடைபெறுகிறது.இந்நிலையில், வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் ஜெகநாத பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில், இக்கோவிலிலுள்ள உற்சவர் பெருமாளுக்கு வைர கிரீடம் அணிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.3 லட்சம் மதிப்பில் ஒன்றரை அடி உயரத்தில், முக்கால் அடி சுற்றளவில் செப்பினாலான நவீன கற்கள் பதித்த வைர கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வைர கிரீடம் வருகிற 24-ந் தேதி குடமுழுக்கு முடிந்து மாலை, நடைபெறும் உற்சவர் பெருமாள் வீதியுலா புறப்பாட்டின் போது அணிவிக்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.