ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கிணற்றில் குதித்தாரா?


ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கிணற்றில் குதித்தாரா?
x

ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் கிணற்றில் குதித்தாரா? என தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகரை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 84). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள கிணற்றில் இவர் விழுந்து விட்டதாக தகவல் பரவியது. உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று அந்த கிணற்றுக்குள் சதாசிவத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த கிணறு பயன்படுத்தப்படாத நிலையில் இருந்ததால் இரவு நீண்ட நேரம் ஆகியும் சதாசிவத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) மீண்டும் தேடுதல் பணியை தொடர இருப்பதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் விரைந்து சென்றனர். இதில் சதாசிவம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கிணற்றுக்குள் குதித்து உள்ளாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story