ராஜினாமா கடிதம் வழங்கவில்லை... நெல்லை மேயர் சரவணன் விளக்கம்
ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் வழங்கவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
நெல்லை,
55 கவுன்சிலர்களை கொண்ட நெல்லை மாநகராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மேயராக பொறுப்பேற்றவர் சரவணன். இந்த நிலையில் மேயரை மாற்றக்கோரி 40 திமுக கவுன்சிலர்கள் கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தனர் .
இதனால் நெல்லை மேயர் சரவணன் பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் எழுத்தியுள்ளதாக தகவல் வெளியானது இந்த தகவலுக்கு நெல்லை மேயர் சரவணன் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயம் சென்றது உண்மை.ஆனால் ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் வழங்கவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
Related Tags :
Next Story