நாமக்கல்லில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


நாமக்கல்லில்  லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

நாமக்கல்லில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

நாமக்கல்

நாமக்கல்:

கரூரில் இருந்து சேலம் நோக்கி நேற்று மாலை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நாமக்கல் நல்லிபாளையம் பைபாஸ் சாலையில் வந்தபோது திடீரென பழுதாகி நின்றது. இதையடுத்து லாரியை நிறுத்தி விட்டு பழுதை நீக்கும் பணியில் டிரைவர் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பரமத்திவேலூர் தாலுகா குன்னமலை பகுதியை சேர்ந்த கருணாகரன் (வயது 26) லாரியின் பின்புற பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் படுகாயம் அடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story