பாப்பிரெட்டிப்பட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மது குடிக்கும் பழக்கம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டவர்த்தியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயகாந்தி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் ரமேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
விசாரணை
இந்த நிலையில் நேற்று முன்தினமும் ரமேஷ் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு ஜெயகாந்தி வீட்டை விட்டு வெளியேறினார்.
இதில் விரக்தி அடைந்த ரமேஷ் விஷம் குடித்து விட்டு மாட்டு தொழுவத்தில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ரமேசை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.