மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
நல்லம்பள்ளி:
தர்மபுரி அருகே வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவன் மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 50). இவருடைய மகள் அனிதா வீடு தடங்கம் கிராமத்தில் உள்ளது. மகள் அனிதாவை கடந்த 22-ம் தேதி பார்த்துவிட்டு மீண்டும் கிருஷ்ணம்மாள் அவரது சொந்த கிராமத்திற்க்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தடங்கம் மேம்பாலம் அருகே உள்ள கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையை அவர் கடந்தபோது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கிருஷ்ணம்மாள் மீது மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்து சிக்கி தவித்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்த கிருஷ்ணம்மாளை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த கிருஷ்ணம்மாள் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.