தர்மபுரியில்தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் மர்மசாவு
தர்மபுரியில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
ஆஸ்பத்திரி ஊழியர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இடுமன் (வயது 22). மயக்கவியல் துறையில் படிப்பை முடித்த இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராகபணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது அவர் மயங்கி விழுந்தார். மயக்க ஊசி போட்டுக் கொண்டதால் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
விசாரணை
பின்னர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதை தொடர்ந்துதர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இடுமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மர்மசாவு குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.