கண்மாயில் மூழ்கி பலியான தொழிலாளி உடல் 3-வது நாளில் கரை ஒதுங்கியது


கண்மாயில் மூழ்கி பலியான  தொழிலாளி உடல் 3-வது நாளில் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே கண்மாயில் மூழ்கி பலியான தொழிலாளி உடல் 3-வது நாளில் கரை ஒதுங்கியது

தூத்துக்குடி

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் கடந்த 27-ந்தேதி மதியம் கிராமம் அருகிலுள்ள கண்மாயில் நண்பர்கள் 2 பேருடன் குளித்து கொண்டிருந்த போது, திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். தீயணைப்புத் துறையினருடன் இணைந்து தூத்துக்குடி முத்துகுளி தொழிலாளர்களும் கண்மாயில் அவரை தேடிவந்தனர். 3-வது நாளான நேற்று காலையில் அவரது சடலம் கண்மாய் கரையில் ஒதுங்கியது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story