வேடசந்தூர் சிறையை ஆய்வு செய்த டி.ஐ.ஜி.


வேடசந்தூர் சிறையை ஆய்வு செய்த டி.ஐ.ஜி.
x
தினத்தந்தி 17 Oct 2023 3:45 AM IST (Updated: 17 Oct 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் கிளை சிறையை மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறை உள்ளது. இங்கு 27 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் வேடசந்தூர் கிளை சிறையை மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தமிழக அரசு வெளியிட்ட ஆணைப்படி கைதிகளுக்கு உணவு வழங்கப்படுகிறதா? என்று சிறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கைதிகளை அணுகும் முறை குறித்து சிறைக்காவலர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். இதேபோல் கைதிகளை தனித்தனியாக சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டார். கைதிகளின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. உறுதி அளித்தார். மேலும் கைதிகளின் அறைகளுக்கு சென்ற அவர், செல்போன்களை பயன்படுத்துகிறார்களா? என்று சோதனையிட்டார். முன்னதாக அவர், வேடசந்தூர் சிறை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ஆய்வின்போது வேடசந்தூர் சிறைக்கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன், சிறைக்காவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story