பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி


பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் வட்டத்தில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை தாசில்தார் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் உள்ள கப்பூர் கிராமம் சந்தன வாய்க்கால், தேரழுந்தூர் கிராமத்தில் உள்ள செம்போடை வாய்க்கால், கோமல் கிராமம் கந்தமங்கலம் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை குத்தாலம் தாசில்தார் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து தருமாறும் கேட்டுக் கொண்டார்.அப்போது குத்தாலம் மண்டல துணை தாசில்தார் ராஜன் மற்றும் பொதுப்பணி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story