டிஜிட்டல் கண்காட்சி திருச்சியில் நேரடி ஒளிபரப்பு


டிஜிட்டல் கண்காட்சி திருச்சியில் நேரடி ஒளிபரப்பு
x

டிஜிட்டல் கண்காட்சி திருச்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி, ஜூன்.7-

சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சம் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை விளக்கும் வகையில் டெல்லி விஞ்ஞான் பவனில் டிஜிட்டல் கண்காட்சியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சி நாடுமுழுவதும் 75 நகரங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி மத்திய சேவை மற்றும் உற்பத்தி வரி ஆணையர் அலுவலகம் சார்பில் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று காலை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி சுங்கத்துறை தலைமை ஆணையர் (தடுப்பு) டாக்டர் உமாசங்கர், ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் ஆணையர் பத்மஸ்ரீ, சுங்க ஆணையர் (தடுப்பு) அனில், முதன்மை வருமான வரி ஆணையர் அமரேந்திரகுமார் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர், வர்த்தகர்கள், வரி பயிற்சியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்சி சுங்கத்துறை ஆணையர் (தடுப்பு) அலுவலகம் சார்பில் சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாவின் முக்கிய வாரம் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சுதந்திரத்திற்கு முன்பான வரிவிதிப்பும், தற்போதைய சுங்கம் மற்றும் சேவை வரி துறையில் இணக்கமான வரி குறைப்பு குறித்து மேடை நிகழ்ச்சி மற்றும் தெருமுனை நாடகம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் திருச்சியில் நேற்று மாலை நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழாவும், நாளை (புதன்கிழமை) போதைப்பொருள் ஒழிப்பு நாள் விழாவும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு கருத்தரங்கமும், 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை மாணவர்களுக்கான ஓவியப்போட்டி மற்றும் மறைமுக வரி குறித்து ஸ்லோகன் எழுதும் போட்டியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சுங்கத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.


Next Story