சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தை திருமணம் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் பரபரப்பு


சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தை திருமணம் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தை திருமணம் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சிறுமி திருமணம் மற்றும் அவர்களுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டது குறித்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து கூறி இருந்தார். மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர், கவர்னர் கூறிய கருத்துகள் முற்றிலும் உண்மை. அதற்கான ஆதாரங்கள் போலீஸ் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடந்ததாக சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் வக்கீல் சந்திரசேகர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், தீட்சிதர்களின் சிறார் திருமணம் சம்பந்தமான புகைப்படங்கள் சட்ட விரோதமாகவும், பொது தீட்சிதர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள போது அவ்வாறு செய்வது சட்டப்படி தவறானது. எனவே காவல் துறையில் உள்ள ஆவணங்கள் மற்றும் மருத்துவ துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்து, சிறார்கள் சம்பந்தமான விவரங்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடாமல் தடைசெய்ய வேண்டும் என்றார்.


Next Story