பாழடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்
மயிலாடுதுறை அருகே கோடங்குடியில் பாழடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே கோடங்குடியில் பாழடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பாழடைந்த சுகாதார நிலையம்
மயிலாடுதுறை அருகே கோடங்குடி ஊராட்சியில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு கோடங்குடி, நெடுமருதூர், செறுதியூர், எலுச்சம்பாத்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்ததால் டாக்டர்கள், செவிலியர்கள் அங்கு வந்து சிகிச்சை அளிப்பதை நிறுத்தி விட்டனர். அதன் பிறகு அந்த கட்டிடம் முழுவதுமாக சேதம் அடைந்து புதர்கள் மண்டி பாழடைந்து காணப்படுகிறது.
3 முறை மட்டும் இயக்கப்படும் பஸ்
ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.இவர்கள் சிகிச்சை பெற 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை உள்ளது. இந்த பகுதிக்கு ஒரு நாளைக்கு 3 முறை மட்டுமே பஸ் இயக்கப்படுவதால் மக்கள் சிகிச்சை பெற செல்ல சிரமப்படுகின்றனர்.
இடிக்க வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே கோடங்குடி ஊராட்சியில் உள்ள பாழடைந்த அரசு துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.