கூடலூர் பஸ் நிலையத்தில் பழுதடைந்த வணிக வளாகம்-வியாபாரிகள் அவதி


கூடலூர் பஸ் நிலையத்தில் பழுதடைந்த வணிக வளாகம்-வியாபாரிகள் அவதி
x

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் வணிக வளாக கட்டிடம் பழுதடைந்து உள்ளது. இதனால் வியாபாரிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் வணிக வளாக கட்டிடம் பழுதடைந்து உள்ளது. இதனால் வியாபாரிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

பழுதடைந்த கட்டிடம்

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு காய்கறி, இறைச்சி மார்க்கெட் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்தில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை.

இது தவிர ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தொடர்ந்து மழை பெய்யும் பகுதி என்பதால் வணிக வளாக கட்டிடத்தில் மழைநீர் தேங்கி பலம் இழந்து வருகிறது. இதன் காரணமாக கட்டிடத்தின் பெரும்பாலான இடங்களில் சுவர்கள் பெயர்ந்து விழுகிறது. தொடர்ந்து கான்கிரீட் கம்பிகள் துருப்பிடித்த நிலையில் வெளியே தென்படுகிறது. இதே நிலை நீடித்தால் பழுதடைந்த வணிக வளாகத்தின் ஒரு பகுதி எந்த நேரத்திலும் இடியும் அபாயத்தில் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

மேலும் மழைக்காலத்தில் கடைகளுக்குள் மழைநீர் வழிந்தோடுவதால் வியாபாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை. மேலும் கடைகளுக்கு மற்றும் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

நகராட்சி வணிக வளாக கட்டிடம் மக்கள் வரத்து அதிகம் உள்ள மையமாக உள்ளது. நகராட்சிக்கு வரி மற்றும் வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பராமரிப்பு பணி உரிய காலகட்டத்தில் மேற்கொள்ளாமல் உள்ளதால் வணிக வளாக கட்டிடம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே, சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து கட்டிடத்தின் மேல் தகர சீட்டுகள் கொண்டு கூரை அமைத்தால் மழை நீர் தேங்க வாய்ப்பில்லை. இதன்மூலம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கட்டிடம் பயன்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Related Tags :
Next Story