பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்
வடரங்கம் கிராமத்தில் சேதமடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் துருப்பிடித்துள்ளன. மேலும், மழை காலத்தில் கட்டிடத்துக்குள் தண்ணீர் கசிந்து ஆவணங்கள் சேதம் அடைந்து வருகின்றன.
புதிதாக கட்ட வேண்டும்
ஆகவே, ஆபத்தான நிலையில் உள்ள வடரங்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் கூறுகையில், வடரங்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக அலுவலகம் வேறு கட்டிடத்தில் செயல்படவும், அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story