அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேல்தணியாலம்பட்டு அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 6-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனைகள், இரவு கரக திருவிழா மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று மதியம் தீ மிதிக்கும் பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் அருகில் உள்ள அக்னி குண்டத்தில் பக்தர்கள் ஒவ்வொருவராக இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகமும், இரவு தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story