மந்தாரக்குப்பம் அருகேமுத்தாலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
மந்தாரக்குப்பம் அருகே முத்தாலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
கடலூர்
நெய்வேலி,
மந்தாரக்குப்பத்தை அடுத்த வடக்கு வெள்ளூர் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் 10-வது ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 17-ந் தேதி கணபதிஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, திருவிளக்கு பூஜை, பால்குடம் எடுத்து அபிஷேகம், அம்மன் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் வடக்குவெள்ளூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story