சக்தி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


சக்தி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே சக்தி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

கடலூர்

சேத்தியாத்தோப்பு

சிதம்பரம் தாலுகா அள்ளூர் கிராமத்தில் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் கோவிலில் 22-வது ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி அம்மனுக்கு கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

நேற்று முன்தினம் காலை கழு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் அள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.


Next Story