வேலூர் பாலாற்றில் தீமிதி திருவிழா


வேலூர் பாலாற்றில் தீமிதி திருவிழா
x

தோட்டப்பாளையம் தருமராஜா கோவில் சார்பில் வேலூர் பாலாற்றில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

வேலூர்

வேலூர் தோட்டப்பாளையத்தில் திரவுபதி அம்மன் சமேத தருமராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 12-ந் தேதி முதல் தினமும் பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செங்கம் வட்டம் மேல்பள்ளிப்பட்டு மணிவாசகத்தின் மகாபாரத விரிவுரையும், தேவனூர் வெங்கடேசனின் கவி இசையுடன் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து 28-ந் தேதி திரவுபதி திருமணமும், 30-ந் தேதி சுபத்திரை திருமணமும், 5-ந் தேதி அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியும், 9-ந் தேதி கர்ண மோட்சம் நிகழ்ச்சியும் நடந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் வேலூர் பாலாற்றில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 9 மணிக்கு புஷ்பக விமானத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தர்வாம்பாள் குப்புசாமி, வி.எஸ்.முருகன், எஸ்.ஆர்.எம் பிரிண்டர்ஸ் எஸ்.ராஜா, எஸ்.மதன்குமார், ராஜ் ஜெனரல் ஸ்டோர் உரிமையாளர் வி.என்.ஆர்.ராஜ், ஆர்.சங்கர், கிருஷ்ணா டிரேடர்ஸ் கே.சி.கே.மணி, கே.சி.கே.சுரேஷ், வேலூர் பெஸ்ட் கன்ட்ரோல் கே.கோபி, வி.தனகோட்டி, ரெட்சன் டிராவல்ஸ் உரிமையாளர் எஸ்.மணிகண்டன், அகில பாரத இந்து மகா சபா மாநில செயலாளர் வி.எம்.கோபி, அங்காளம்மன் மோட்டார் மெக்கானிக் ஒர்க்ஸ் ஏ.கே.பரந்தாமன், ஏ.கே.ஹரிகுமார், தோட்டப்பாளையம் பி.மகேஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை மகாபாரத கமிட்டி தலைவர் சி.கே.கணேசன், செயலாளர்கள் ஏ.குப்புசாமி, பி.பாலவிநாயகம், பொருளாளர்கள் ஏ.கே.டி.சண்முகம், ஏ.கே.பெரியசாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story