பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
x

தினத்தந்தி புகாா் பெட்டி

ஈரோடு

ஆபத்தான மின்கம்பம்

ஈரோடு சூரம்பட்டி பெரியார் சாலையில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி கான்கிரீட் பெயர்ந்து வலுவிழந்து உள்ளது. மேலும் ஆபத்தான நிலையில் சாய்ந்து காணப்படுகிறது. எனவே இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சூரம்பட்டி.

குடிநீர் வினியோகிக்கப்படுமா?

கோபி அருகே உள்ள மேவாணி கிராமம் தபால் நிலைய தெருவில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கு கண்ணனூரில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரின்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனே குடிநீர் சீராக வினியோகம் செய்யப்பட சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

பொதுமக்கள், மேவாணி.

சாலை வசதி

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சுண்டப்பூரில் சாலை வசதி இல்லை. இதனால் மலைக்கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆக சாலை வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பர்கூர்.


குண்டும், குழியுமான சாலை

கோபி சக்தி சாந்திநகரில் உள்ள ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சக்தி சாந்தி நகா்.

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூா் பஸ் நிறுத்தம் அருகில் பள்ளிக்கூடத்தையொட்டி உள்ள சாலைகளின் சந்திப்பில் பிளக்ஸ் பேனா்கள் கட்டப்பட்டும், கற்கள் குவித்தும் போடப்பட்டுள்ளது. செடி, கொடிகள் வளா்ந்து புதா் மண்டியும் காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு சென்று வர சிரமப்படுகிறாா்கள். உடனே கல் குவியலை அகற்றவும், புதா்களை அகற்றவும் அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், குருவரெட்டியூர்.

ரோட்டில் பள்ளம்

அந்தியூரில் இருந்து ஆத்தப்பம்பாளையம் செல்லும் பிரிவு ரோட்டில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் தவறி விழுந்து காயம் அடைகிறாா்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட அதிகாாிகள் ஆவன செய்வார்களா?

பொதுமக்கள், புதுப்பாளையம்.


Next Story