பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

வீணாக வெளியேறும் குடிநீர்

ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் அன்னை சத்யா நகர் உள்ளது. இந்த பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் ரோட்டில் நடமாட முடியவில்லை. மேலும் அந்த பகுதியில் குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அன்னை சத்யா நகர்.

பயன்பாட்டுக்கு வருமா?

பங்களாப்புதூரை அடுத்த புஞ்சைதுறையம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட உப்புபள்ளம் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அந்த குடிநீர் தொட்டி இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. எனவே அந்த குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், உப்புபள்ளம்.

குவிந்து கிடக்கும் குப்பை

ஈரோடு மூலப்பாளையத்தை அடுத்த வாய்க்கால் மேடு பஸ் நிலையம் அருகே சாலையோரம் நீண்ட தூரத்துக்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பூந்துறை.

ரோடு போடப்படுமா?

சத்தியமங்கலம் கெஞ்சனூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் புதிதாக ரோடு போட முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அங்கு பாதை தோண்டப்பட்டது. ஆனால் ரோடு போடப்படவில்லை. இதனால் அந்த ரோட்டில் நடந்து செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகிறார்கள். எனவே அங்கு சாலை அமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், சத்தியமங்கலம்.

ஆபத்தான மின் கம்பம்

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் கூட்டுறவு சங்கம் அருகே தெருவிளக்கு ஒன்று உள்ளது. இந்த தெருவிளக்கு மிகவும் பழுதடைந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதனால் மின் கம்பம் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தவுட்டுப்பாளையம்.

பழுதடைந்த ரோடு

கோபியை அடுத்த கரட்டூரில் இருந்து பாரியூருக்கு செல்லும் ரோடு அமைந்துள்ளது. அந்த ரோட்டின் தொடக்கத்தில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கரட்டூர்.

தொட்டிைய மூட வேண்டும்

கோபியில் இருந்து கருக்கம்பாலி செல்லும் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் அருகில் குடிநீர் குழாய் அமைக்க குழி தோண்டப்பட்டு அங்கு தொட்டி கட்டப்பட்டது. பின்னர் அந்த தொட்டியில் கான்கிரீட் சிலாப் போட்டு மூடப்பட்டது. ஆனால் அந்த தொட்டியின் ஒரு பகுதியில் கான்கிரீட் சிலாப் போடப்படவில்லை. இதனால் அந்த தொட்டி திறந்துகிடக்கிறது. இதில் யாராவது தவறி விழுந்து விடும் நிலை உள்ளது. எனவே யாராவது தவறி விழுந்து உயிர் சேதம் ஏற்படும் முன் தொட்டியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கருக்கம்பாலி.


Next Story