தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

தூர்வாரப்படாத ஏரிகள்

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு பகுதியில் உள்ள ஏரிகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் வெயில் காலங்களில் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரிகளை தூர்வாரி மழை பெய்யும்போது மழைநீரை முழுமையாக சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், லெப்பைக்குடிக்காடு.

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் மாவட்டம், ஆடுதுறை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் மழை பெய்யும்போது சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதால் முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கிராமத்தில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆடுதுறை.

அடிப்படை வசதிகள் வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டைக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி, இருக்கை வசதிகள் உள்ளிட்டவை போதிய அளவில் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story