தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் முருகன் கோவில் கொள்ளிடக்கரை சாலையில், ரெயில்வே சுரங்கப்பாதை வரை கடந்த ஒரு வாரமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இப்பகுதியில் பெண்கள் நடமாட பெரிதும் அச்சப்படுவதுடன் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சரி செய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

பாலசுப்பிரமணியம், ஸ்ரீரங்கம், திருச்சி.

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடி

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே வில்லியம்ஸ் சாலையில் உள்ள கடைகள், விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில், சாலையின் அடிப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுவிட்டால் அதனை சரிசெய்யும் வகையில், மூடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூடியானது பாதி திறந்த நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடியில் மோதி காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.


Next Story