தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஆர்.சி.பாத்திமா தொடக்கப்பள்ளி அருகில் உள்ள ஆண்டாள் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைபெய்யும்போது இந்த குளத்தில் மழைநீரை சேகரிக்க வேண்டும். அப்போதுதான் வெயில் காலங்களில் இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை இருக்காது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த குளத்தினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, சுற்றிலும் நடைபாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சொக்கலிங்கம், ஜெயங்கொண்டம், அரியலூர்.


Next Story