தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நோயாளிகள் அச்சம்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி 8-ம் மண்டகப்படியில் அரசு மருத்துவமனை உள்ளது. அதனை சுற்றி கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடமாட இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சவுந்தர்யா, அரிமளம், புதுக்கோட்டை.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா ?
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தில் புதுக்கோட்டையில் இருந்து பெருங்குடி, முனசந்தை, செங்கீரை வழியாக இராயவத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பஸ் வருவதற்கு ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் இடைவெளி ஆகிறது. இதனால் மற்ற நேரத்தில் பஸ் இல்லாமல் வேறு இடங்களுக்கு சென்று வர பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், நோயாளிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், செங்கீரை, புதுக்கோட்டை.