தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையிலிருந்து வெண்பாவூர் செல்லும் சாலையில் வேதநதி ஆற்றுப்பாலம் அருகில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேப்பர் ஆலை வரை சாலை மிகவும் குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் சாலையை கடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வேப்பந்தட்டை- வெண்பாவூர் சாலையை உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செல்வராஜ், வேப்பந்தட்டை, பெரம்பலூர்.


Next Story