தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத தெருவிளக்குகள்
திருச்சி ஸ்ரீரங்கம்-கொள்ளிடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புதிய பாலத்திலுள்ள தெரு விளக்குகள் ஆரம்பம் முதல் நெம்பர் 1 டொல்கேட் ஐயன் வாய்க்கால் வரை எரிவது இல்லை. இதனால் இப்பகுதிகள் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் இந்த சாலை வழியாக பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலசுப்பிரமணியம், ஸ்ரீரங்கம்.
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
திருச்சி கிழக்குதாராநல்லூர் அக்ரஹாரம் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குமார், கிழக்குதாராநல்லூர்.
ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி
திருச்சி மணப்பாறை அருகே உள்ள வ.பெரியபட்டி ஊராட்சி, பூலாம்பட்டி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சீரான மின்சார வினியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக இப்பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பூலாம்பட்டி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி பீமநகர் மேல கொசத்தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீருக்காகவும், அன்றாட தேவைகளுக்காகவும் இப்பகுதியில் அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே வடிகால் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால் அடிபம்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல வழியின்றி அருகே தேங்கி நின்று சாக்கடையாக மாறியுள்ளது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பீமநகர்.
ஆபத்தான மின்கம்பம்
திருச்சி திருவெறும்பூர், அண்ணா வளைவு உள்ளே திருவள்ளுவர் தெருவில் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டு அதன் மூலம் அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவெறும்பூர்.